February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் காயம்

மாலைதீவு பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத், இன்று (வியாழக்கிழமை) தமது வீட்டுக்கு வெளியே  இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அவரது இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் சம்பவ இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்த நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

குண்டு வெடிப்பு ஒரு கொலை முயற்சியா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

53 வயதான நஷீத், 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் பின்னர், மாலைதீவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி ஆவார். அவர் 2008 முதல் 2012 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

https://www.youtube.com/watch?v=WBimOubkSAk