
அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு முன்னர் 160 மில்லியன் வயது வந்த அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றி முடிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்னர் இந்த புதிய இலக்கை எட்டவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுவரையில் 105 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதோடு, அமெரிக்கா ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி ஏற்றி வருகின்றது.
“இன்னும் இரண்டு மாதங்களில் சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நாம், வைரஸில் இருந்தும் சுதந்திரம் பெறுவோம்.
இதனை நாம் செய்ய முடியும். இதனை நாம் செய்து முடிப்போம்”
என்று அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.