வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் மெட்ரோ ரயிலொன்று விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பயணிக்கும் ஓடுதள பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் இரண்டாக பிளவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளூர் நேரப்படி 3 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மெக்சிகோ நகர செயலாளர் அல்போன்சோ சுரேஸ் டெல் ரியல் மிலெனியோ தெரிவித்துள்ளார்.