November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

27 வருட திருமண வாழ்க்கையை முறித்து பில் கேட்ஸ் தம்பதி விவாகரத்து!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தன் மனைவியை விவாகரத்து செய்யத் தீர்மானித்துள்ளார்.

தானும் மனைவி மெலின்டா கேட்ஸ்சும் நீண்ட ஆலோசனைகளுக்கு பின்னர் விவாகரத்து செய்துகொள்ளத் தீர்மானித்ததாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தமது 27 வருட கால திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவதற்கான அறிவிப்பை இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கணவன்- மனைவியாக தொடர்வது தமது வாழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பில், மெலிண்டா ஆகியோர் இலட்சக் கணக்கான மக்களுக்கு நற்பணி செய்யும் தொண்டர் நிறுவனமொன்றை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.