November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவுஸ்திரேலியாவின் இந்தியா மீதான பயணத் தடை மனித உரிமை மீறலாகும்’: வலுக்கும் கண்டனங்கள்

இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

மே மாதம் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுடன் தொடர்புபடும் நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, மே மாதம் 15 ஆம் திகதி வரை இந்த புதிய ஒழுங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவிப்பு, ‘இனவெறி’ மற்றும் ‘மனித உரிமை மீறல்’ என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கை தீவிரமானது என்று அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினர், சட்ட நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அரசாங்கத்தின் தீர்மானம் ‘இனவெறி’ கொண்டது என்பதை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மறுத்துள்ளார்.

இந்தியாவில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய பிரஜைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.