January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – மனைவி மெலானியாவுக்கு கொரோனா தொற்று உறுதி


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப், மெலானியா ட்ரம்ப் இருவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், “நாம் இணைந்து இதனைக் கடந்து செல்வோம்” என்று கூறியுள்ளார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட உடனேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.