கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார்.
வாஷிங்டன் ராணுவ மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட ட்ரம்ப் தற்போது வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.
அவர் முற்றிலும் தொற்றிலிருந்து விடுபட்டாரா என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
வெள்ளை மாளிகை வந்த ட்ரம்ப் முகக்கவசத்தை கழற்றி விட்டு அங்கிருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
கடந்த வாரத்தில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ட்ரம்ப்புக்கு காய்ச்சல் அதிகரித்தமையால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிக்சைக் காலத்தில் அவர் வெளியில் காரில் பயணித்தார். இது சர்வதேச ஊடகங்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.