January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு

படம்: உலக உணவுத் திட்டம்

2020 -ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஐநாவின் ‘உலக உணவுத் திட்டம்’ (WFP) அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோதல்கள் நிலவிய பகுதிகளில் அமைதிக்கான சூழல்களை உருவாக்கவும், மில்லியன் கணக்கான மக்களின் பசியைப் போக்குவதற்கும் பங்களித்தமைக்காக அந்த அமைப்புக்கு இம்முறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

107 அமைப்புகளும் 211 தனி நபர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், 1.1 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தப் பரிசு உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 88 நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கியிருந்த சுமார் 100 மில்லியன் பேருக்கு இந்த அமைப்பு உணவு உதவி வழங்கியுள்ளது.

உலகின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் பெரும் துணிச்சலுடனும் உறுதிப்பாட்டுடனும் உலக உணவுத் திட்டம் பணியாற்றுகின்றது என்று ஐநாவின் தலைமைச் செயலர் அன்டோனியோ குத்தரஸ் பாராட்டியுள்ளார்.