2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ‘தி பாதர்’ திரைப்படத்திற்காக அன்டனி ஹாப்கின்ஸ் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருதை ‘நோமட்லேண்ட்’ திரைப்படத்திற்காக பிரான்சிஸ் மெக்டார்மண்ட் பெற்றுக்கொண்டுள்ளதுடன், சிறந்த திரைப்படத்திற்கான விருது நோமட்லேண்ட் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது ‘எனதர் ரவுண்ட்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
93 வது ஆஸ்கர் விருது ஒஸ்கார் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
வழக்கமாக இந்த விருது வழங்கல் விழா பெப்ரவரி மாதத்திலேயே நடைபெறும். ஆனால் உலகலாவிய கொவிட் தொற்று நிலைமையால் விழா இரண்டு மாதங்கள் தாமதமாகவே இம்முறை நடைபெற்றது.
இதேவேளை ‘யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா’ திரைப்படத்திற்காக டேனியல் கலுயா சிறந்த துணை நடிகருக்கான விருதையும், ‘நோமேன்லேண்ட்’ என்ற திரைப்படத்திற்காக க்ளோயி சாவ் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.