
சூயஸ் கால்வாயில் சிக்கிய ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பலை எகிப்தின் சூயஸ் கால்வாய் அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது.
சூயஸ் கால்வாய் அதிகாரசபை முன்வைத்த இழப்பீட்டுத் தொகையை எவர் கிவன் கப்பல் நிர்வாகம் வழங்க மறுத்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு கப்பல் கையகப்படுத்தியுள்ளது.
எவர் கிவன் கப்பலின் ஜப்பானிய உரிமையாளர் 900 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் வரை கப்பலைக் கையகப்படுத்தியுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.
கப்பலின் காப்புறுதி வழங்கல் நிறுவனங்களில் ஒன்றான யூகே க்ளப் முன்வைத்த இழப்பீட்டுத் தொகையை சூயஸ் கால்வாய் அதிகாரசபை நிராகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
‘சூயஸ் அதிகாரசபை மீட்புக் கட்டணமாக 300 மில்லியன் டொலரும், நன்மதிப்பு இழப்புத் தொகையாக 300 மில்லியன் டொலரும் கோருவது பெரும் அசாதாரணமானது’ என்று யூகே க்ளப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எகிப்து குறித்த கப்பலைக் கையகப்படுத்தியுள்ளது.
மார்ச் 24 ஆம் திகதி சூயஸ் கால்வாயிலுக்கு குறுக்கே தரைத் தட்டிய நிலையில் சிக்கியிருந்த கப்பல் 6 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.