July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அகற்றிக்கொள்வதாக அறிவித்தார் ஜோ பைடன்

file photo: Wikipedia

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக அகற்றிக்கொள்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு 20 வருடம் பூர்த்தியாகின்ற நிலையில், இவ்வருடம் செப்டம்பர் 11 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் யுத்தம் நிறைவுக்கு வருவதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து மே மாதத்தில் படைகளை அகற்றிக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

தாலிபான் உட்பட கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் வன்முறைகளை நிறுத்திக்கொள்ளத் தவறியதால் மே மாதத்தில் படைகளை அகற்றிக்கொள்வது சாத்தியமில்லை என அமெரிக்க, நேட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 3500 அமெரிக்க படையினர் உட்பட 9600 நேட்டு படையினர் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.