May 14, 2025 1:35:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை!


கண்டம் விட்டு கண்டம் பாயும் புதியவகை ஏவுகணையை வடகொரியா காட்சிப்படுத்தியுள்ளது.

வடகொரிய ஆளும் கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்த ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை ஆயுதம் இதற்கு முன்னதாக எந்தவொரு இராணுவ அணிவகுப்பிலும் இருந்ததில்லை என்பதுடன் சோதனை நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இது உலகின் தரைவழியாக நகர்த்தக்கூடிய உலகின மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையாக அது காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய ஏவுகணை

அணு ஆயுதத்தை தாங்கிச்சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் பதற்றத்திலேயே இருந்து வருகிறது.

ஆளும் கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி கிம் ஜங் உன், நாங்கள் தொடர்ந்தும் எங்கள் தேசிய பாதுகாப்பு சக்தியையும் தற்பாதுகாப்பு சக்தியையும் கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.