January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’: அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி முடக்கப்பட்டது

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நாடாளுமன்ற கட்டட வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் “வெளிச்சக்திகள் மூலமான பாதுகாப்பு அச்சுறுத்தல்” ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் எச்சரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகள் இருவர் மீது வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வளாக பாதுகாப்புக்கு பொறுப்பான காவல்துறையினர் கூறியுள்ளனர்.

குறித்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சந்தேகநபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வாகனம் ஒன்று நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு தடுப்பு அரண் மீது மோதியுள்ளதைக் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.