தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் ரயிலொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 30 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
350 பயணிகளுடன் தலைநகர் தைபெய்யில் இருந்து டைதுங் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுரங்கத்திற்குள் தண்டவாளத்தை விட்டு விலகி ரயில் சுவருடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், அதனுள் பலர் சிக்கியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரையில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புக்குழுவினர் ரயிலுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தாய்வான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.