
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்விக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆரிப் அல்வி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
‘எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவர் மீதும் அல்லா இரக்கம் காட்டட்டும். தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்டேன்.ஆனால், 2வது டோஸ் செலுத்திக் கொண்ட பின்னரே அன்டிபையோட்டிஸ் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும். 2வது டோஸை இன்னும் ஒரு வாரத்தில் செலுத்த உள்ளேன். தொடர்ந்து கவனமுடன் இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.