எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த வணிகக் கப்பல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கிப் புறப்பட்ட 400 மீட்டர் நீளமான ‘எவர்கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த 24 ஆம் திகதி சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி தரைதட்டி சிக்கிக்கொண்டது.
இந்த திடீர் விபத்து காரணமாக ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டு, ஏராளமான வணிகக் கப்பல்கள் குவிந்து, நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பக்க சுவர்களையும் விரிவாக்கி, கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் தொடர்ந்தும் ஈடுபட்ட நிலையில், 5 நாட்களின் பின்னர் இன்று காலை கப்பல் மிதக்கவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது கப்பல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.