துபாயின் துணை ஆட்சியாளர் ஷெய்க் ஹம்தான் பின் ராஷிட் அல் மஹ்தூம் காலமானார்.
துபாயின் துணை ஆட்சியாளராகவும் நிதி அமைச்சராகவும் செயற்பட்ட இவர், நேற்று 75 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
சத்திர சிகிச்சையொன்றின் பின்னர், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு துபாயின் முதலாவது அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது முதல் உயிரிழக்கும் வரை ஷெய்க் ஹம்தான் பின் ராஷிட் அல் மஹ்தூம் நிதி அமைச்சராக செயற்பட்டு வந்துள்ளார்.
ஷெய்க் ஹம்தான் பிரிட்டன், கென்டக்கி மற்றும் அயர்லாந்தில் எட்டு குதிரைப் பண்ணைகளை வைத்துள்ளதோடு, ஐரோப்பாவில் நடத்தப்படும் முன்னணி குதிரைப் பந்தயங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக அவரது இறுதிக் கிரியைகள் குடும்பத்தினருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, துபாயின் அரச அலுவலகங்களை மூன்று நாட்களுக்கு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேநேரம், இவரது மரணத்தின் காரணமாக துபாயில் 10 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.