July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிய சரக்குக் கப்பல்; கடல்வழி விநியோகப் பாதை முடங்கியது

எகிப்தின் சூயஸ் கால்வாயில் வணிகக் கப்பல் ஒன்று குறுக்கே சிக்கிக்கொண்டதில் சூயஸ் கால்வாயின் ஊடாக கப்பல் பயணம் தடைப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கிப் புறப்பட்ட 400 மீட்டர் நீளமான எவர்கிவன் என்ற வணிகக் கப்பலே இவ்வாறு சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ளது.

கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, இவ்வாறு குறுக்காக சிக்கியுள்ளது.

கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பக்க சுவர்களையும் விரிவாக்கி, கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

https://twitter.com/butsrvbi/status/1374843926352396293?s=20

இந்த திடீர் விபத்து காரணமாக ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டு, ஏராளமான வணிகக் கப்பல்கள் குவிந்து, நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சூயஸ் கால்வாயின் பழைய பயணப் பாதை திறக்கப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாய் முடக்கம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் பிரதான வருவாய் வழியான சூயஸ் கால்வாய் 1869 ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, அது 193 கிலோ மீட்டர் நீளமும் 205 மீட்டர் அகலமும் கொண்டது.