October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்’: சீனா முறைப்பாடு

File Photo

அவுஸ்திரேலியா மனித உரிமைகளை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் சீனா முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியா இயக்குவதாக சீனாவினால் மனித உரிமை பேரவையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன், சிட்னி, டார்வின் உள்ளிட்ட அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதிகளில் தடுப்பு முகாம்களில் பெருமளவு குடியேற்றவாசிகள், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு மருத்துவ வசதிகள் உரிய தரத்தில் காணப்படவில்லை எனவும் சிலர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை இந்த கடல் கடந்த தடுப்பு முகாம்களை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குடியேற்றவாசிகள், அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் குறிப்பாக குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீனா இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா படகு வழியாக தஞ்மடைந்த முயன்ற புகலிடக்கோரிக்கையாளர்கள் நடுக்கடலில் இடைமறித்து பப்புவா நியூகினியா, நவுரு ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியா அரசு தடுத்து வைப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவையே அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் என அடையாளப்படுத்தபடுகின்றன.

இதேவேளை அவுஸ்திரேலிய படையினர் வெளிநாடுகளில் மேற்கொண்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.