January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க நாடாளுமன்றத்தினை இலக்குவைத்து ஆயுதகுழுவொன்று வன்முறைகளில் ஈடுபடலாம் என அச்சம்

அமெரிக்க நாடாளுமன்றத்தினை இலக்குவைத்து இனந்தெரியாத ஆயுதக்குழுவொன்று வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற புலனாய்வு தகவல்களை தொடர்ந்து நாடாளுமன்ற பகுதியில் அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஆயுதக்குழுவொன்று தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாத இறுதியில் மார்ச் நான்காம் திகதி நாடாளுமன்றத்தினை இலக்குவைத்து வன்முறை தாக்குதலை மேற்கொள்வதற்கு இனந்தெரியாத தீவிரவாத வன்முறை குழுக்கள் திட்டமிட்டிருந்தன என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களை அகற்றுவதற்கு அவர்கள் திட்டமிட்டதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கையில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான பாதுகாப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு பலப்படுத்தியுள்ளதுடன் ஆளணிகளையும் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.