June 14, 2025 18:06:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்து கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Earth Quake common Images

நியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியை அண்மித்த கடற் பிரதேசத்தில் 7.3 ரிச்டர் அளவிலான பயங்கர நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து உட்பட பசுபிக் வலயத்திலுள்ள சில நாடுகளுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நியூசிலாந்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை அண்மித்த பிரதேசங்களில் வசிப்போரை உடனடியாக உயரமான பிரதேசங்களை நோக்கி செல்லுமாறு அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.