February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகளாவிய கொரோனா: ‘168 மில்லியன் மாணவர்கள் ஒரு வருட கல்வியை இழந்துள்ளனர்’

உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்கு ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், 168 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

168 மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதைக் குறிக்கும் விதமாக யுனிசெப் நிறுவனம், 168 வெற்றுக் கதிரைகளையும் 168 வெற்றுப் புத்தகப் பைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய முடக்க நிலை காரணமாக கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான கவனயீர்ப்பு செயற்பாடாகவே இது அமைந்துள்ளது.

இதேநேரம், ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இதனைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, “கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் ஒரு வருட கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு வருடம் வீண் போவதை மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றும் ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.