ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து மீண்டும் ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈராக்கின் அன்பர் பிராந்தியத்தில் உள்ள அய்ன் அல் அசாத் விமானப் படைத்தளத்தை இலக்குவைத்து நடைபெற்ற இந்த ரொக்கட் தாக்குதலில் பத்து ரொக்கட்கள் தளத்திற்குள் விழுந்து வெடித்துள்ளன.
குறிப்பிட்ட தளத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலிருந்து 13 ரொக்கட்கள் அமெரிக்க தளத்தை நோக்கி ஏவப்பட்டன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த ரொக்கட் தாக்குதல்களால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈராக்கின் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் நிலைகளை அமெரிக்க படையினர் இலக்குவைத்த பின்னர் இடம்பெற்றுள்ள முதலாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை கண்டித்துள்ள ஈராக்கிற்கான பிரிட்டிஸ் தூதுவர் இந்த தாக்குதல் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
ஈராக்கிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே பன்னாட்டு படைகள் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக ஈரான் சென்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.