February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குவைத் மன்னர் ஷேக் ஷபா அல்-ஷபா காலமானார்

குவைத் மன்னர் ஷேக் ஷபா அல்-அஹமட் அல்-ஷபா தனது 91ஆவது வயதில் காலமானதாக அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது.

மன்னரின் மறைவை அடுத்து குவைத் அரசு 40ஆம் நாள் துக்க தினத்தை அறிவித்துள்ளது.

ஷேக் ஷபா 2006ஆம் ஆண்டு முதல் குவைத்தினை ஆட்சி செய்து வந்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு பொறுப்பாக இருந்தார்.

ஷேக் ஷபா தனது ஆட்சிக் காலத்தில் சவூதி அரேபியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்துள்ளார்.

1990-91 வளைகுடா யுத்தத்திற்குப் பின்னர் ஈராக்குடன் மீண்டும் உறவுகளைப் புதுப்பிப்பதில் அக்கறை காட்டியதுடன் ஈரானுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

குவைத் மன்னரின் மறைவுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

குவைத்தின் புதிய ஆட்சியாளராக, மறைந்த மன்னரின் சகோதரரான 83-வயது ஷேக் நவாப் அல்- அஹ்மட் பதவியேற்கவுள்ளார்.