ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை நஞ்சூட்டி கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ரஷ்ய அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை.விதிக்கவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தின் சிரேஸ்ட் அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்யவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக அவரது நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள முதலாவது நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதிக்க மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.