பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக சவுதி அரேபியாவின் இளவரசர் முகமட் பின் சல்மானை சர்வசே சமூகம் தாமதமின்றி தண்டிக்கவேண்டும் என பத்திரிகையாளரை திருமணம் முடிக்கவிருந்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே தெரிந்திருந்த உண்மை மீண்டும் ஒருமுறை வெளியாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் துருக்கிய ஆராய்ச்சியாளரான ஹாடீஜா ஜெங்கிஸ் என்ற குறித்தப் பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக தலைவர்கள் சவுதி அரேபியாவின் இளவரசரிடமிருந்து விலக வேண்டும் என்றும், சவுதி அரேபியா மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதி நிலைநாட்டப்படும் போதே உண்மை அதன் அர்த்தத்தை முழுமையாக பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி 2017 சவுதியிலிருந்து வெளியேறி துருக்கி சென்றிருந்தார்.
2018 செப்டம்பர் 28 ஆம் திகதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்வதற்காக விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரை கொலை செய்வதற்கான அனுமதியை சவுதி அரேபியாவின் இளவரசர் முகமட் பின் சல்மான் வழங்கினார் என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.