
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோசி ஊழலில் ஈடுபட்டார் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
2007 இல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அவர் சட்டவிரோதமாக நிதியை பெற்றுக்கொண்டது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மிகவும் இரகசியமான தகவல்களை வழங்கினால் நீதிபதியொருவருக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்பொன்றை பெற்றுத்தருவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார் என சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்கோசி பதவி விலகிய பின்னர் அவருக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையிலான உரையாடல்களை இடைமறித்து கேட்டவேளை இந்த விடயம் தெரியவந்தது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி தொடர்பிலான இன்னொரு விசாரணையின் போதே இது தெரியவந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2007 முதல் 2012 முதல் பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்த சர்கோசி இதனை நிராகரித்துள்ளார்.
தான் அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்கோசி பத்து நாட்களிற்குள் தனது தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.