January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ்: பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.

“உலகம் மிகவும் வேதனையான ஒரு மைல் கல்லை தாண்டியுள்ளது’ என்று இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள ஐநா தலைமைச் செயலர் அன்டோனியோ குத்தரஸ் கூறியுள்ளார்.

நாம் ஒவ்வொரு தனி நபரினதும் உயிர் குறித்து கவனத்தை தவறவிடக்கூடாது” என்றும் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மலேரியாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

பல நாடுகளில் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து உயிரிழப்பு வீதம் கூடிவருகின்றது. கடந்த மூன்று மாதங்களில் அரை மில்லியனிலிருந்து ஒரு மில்லியனாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

24 மணிநேரத்தில் 5,400 பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுகின்றது. அதாவது, ஒரு மணிநேரத்தில் 226 பேரும் 16 செக்கன்களுக்கு ஒருவரும் உயிரிழக்கும் நிலை காணப்படுகின்றது.