June 15, 2025 22:49:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்!

File Photo: Twitter/ U.S. Army

சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கமைய ஈரான் ஆதரவு படைகளின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை என்பதால், இது சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.