May 15, 2025 20:58:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவராக லின்டா தோமஸ் பதவிப் பிரமாணம்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவராக லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னிலையில் லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் ஐநா தூதுவராக லின்டா நியமிக்கப்படுவதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை செனட் அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்தே, இவ்வாறு பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

அமெரிக்காவின் இராஜதந்திரம் மற்றும் பலதரப்பு உறவுகள் மீளவும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் தெரிவித்துள்ளார்.

பல தசாப்த அனுபவமிக்க, மதிப்புக்குரிய வெளியுறவு சேவை அதிகாரியான லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் ஐநாவுக்கான தூதுவராக பதவியேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.