
Photo : Facebook/WHO
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்தொகுதியான 60000 டோஸ் ‘அஸ்டிராஜெனேகா’ கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன.
இதன் அடுத்தக்கட்டமாக ஐவரி கோஸ்டிற்கு தடுப்பூசிகள் அனுப்பப்படவுள்ளன.
கானாவிற்கு தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளமை ஒரு மகத்தான தருணம் என தெரிவித்துள்ள கானாவிற்கான யுனிசெவ் மற்றும் உலகசுகாதார ஸ்தாபன நிபுணர்கள் அங்கு கொரோனா வைரஸினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இந்த தடுப்பூசிகள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டுள்ளனர்.
செல்வந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் தடுப்புமருந்து தேசியவாதத்தின் பாதிப்பிலிருந்து மூன்றாம் உலக நாடுகளை காப்பாற்றுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கொவெக்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டது.
இவ் திட்டத்தின் கீழ் அடுத்த ஆறுமாதங்களில் 145 நாடுகளில் உள்ள தலா மூன்று வீதமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கும் அதிகளவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கும் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
வருட இறுதிக்குள் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் எண்ணியுள்ளது.