November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித உரிமை மீறல்களின் தொற்றுநோயை உலகம் எதிர்கொள்கின்றது’

உலகம் மனித உரிமை மீறல்களின் தொற்றுநோயை எதிர்கொள்கின்றது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஏதேச்சதிகார அரசாங்கங்கள் உரிமைகள், சுதந்திரங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸினை பேச்சு சுதந்திரம் மற்றும் உடன்பட மறுப்பதை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்டியனில் அவர் இதனை எழுதியுள்ளார்.

மனித உரிமை விடயங்களில் பல வருடங்களாக சாதிக்கப்பட்ட முன்னேற்றங்களிற்கு கொரோனா வைரஸ் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என எழுதியுள்ள செயலாளர் நாயகம், வறுமை, பாரபட்சம் இயற்கை சூழல் அழிக்கப்பட்டமையினால் இந்த துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனித உரிமை மீறல்கள் எங்கள் சமூகத்தில் பலவீனங்களை உருவாக்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது சர்வதேச அளவில் ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்றன. பத்திரிகையாளர்கள் மீது அதிகரித்த தாக்குதல்களும் சுதந்திரமான பேச்சினை கட்டுப்படுத்துவதற்கும் தணிக்கைகளிற்குமான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் அதில் அவர் எழுதியுள்ளார்.