January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து ஈராக்கில் மீண்டும் ரொக்கட் தாக்குதல்

அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து சனிக்கிழமை ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சலா அல்டின் மாகாணத்தில் உள்ள பலாட் விமான தளத்தினை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

நான்கு ரொக்கட்கள் விமான தளத்திற்குள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள ஈராக்கின் பாதுகாப்பு தரப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலிற்கு எவரும் உரிமை கோரவில்லை.ஒரு வார காலத்தில் அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை சேர்ந்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஈரான் ஆதரவு ஈராக்கிய குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொள்வதாக சந்தேகங்கள் காணப்படுகின்றன .