
photo : Twitter /meraklihavaci
அமெரிக்காவின் டென்வர் பகுதியில் வானில் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் சில பாகங்கள் வீடுகளின் மேல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொயிங் 777 என்ற விமானம் 241 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் பாகங்கள் இவ்வாறு வீடுகளின் மேல் விழுந்துள்ளன.
“விமானம் புறப்பட்டவுடன் பாரிய சத்தமொன்று கேட்டது, விமானம் வேகமாக குலுங்கத் தொடங்கியது, தரையை நோக்கி சென்று கொண்டிருந்தது” எனவும் சம்பவம் குறித்து பயணியொருவர் விபரித்துள்ளார்.
அத்தோடு “நாங்கள் உயிரிழந்தால் எங்களை அடையாளம் காண்பதற்காக எங்களிடமிருந்த ஆவணங்களை தயாராகவைத்திருந்தோம்” எனவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
https://twitter.com/meraklihavaci/status/1363275222472921088?s=19
“பாரிய சத்தமொன்று கேட்டது, வானில் கரும்புகை மண்டலம் தோன்றியது, விமானத்தின் பாகங்கள் கீழே விழத்தொடங்கின” என தரையிலிருந்த விமானத்தை அவதானித்த மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யுனைட்டட் எயார்லைன்ஸூக்கு சொந்தமான குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரமொன்று இயங்க மறுத்ததையடுத்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.