January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவில் 2ஆம் உலகப்போரில் பங்கேற்றவருக்கு முதல் தடுப்பூசி

(Photo:Scott Morrison/Twitter)

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமாகியது.

சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மொரிசன், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மூத்த குடிமக்களுடன் இணைந்து தடுப்பூசிக்கான முதல் டோஸினை செலுத்திக்கொண்டார்.

அந்தவகையில் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய  ஜேன் மலிசியாக் (84) என்பவர் கொரோனா தடுப்பூசியை பெற்று கொண்ட முதல் அவுஸ்திரேலியர் ஆவார்.

இதேபோன்று தலைமை மருத்துவ அதிகாரி பால் கெலி மற்றும் முதியோர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தடுப்பூசிகளை போட்டு கொண்டனர்.

அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வந்த அனைவருக்கும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘நாளை மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது. எனவே, அதற்கு முன்பு மக்களிடம் தடுப்பூசி மீது இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும்.

அதற்காகவே இதனை நாங்கள் செலுத்திக்கொண்டோம். தடுப்பூசி பாதுகாப்பானது. தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அது மிகவும் முக்கியமானது.

மேலும், தொற்றால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மற்றும் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியினை முதலில் செலுத்திக்கொள்ள வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.