January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் -19 : உயிரிழப்பு ஒரு மில்லியனை கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

இதுவரையில் உலகம் பூராகவும் 33,177,416 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் 24,504,931பேர் குணமடைந்துள்ளனர்.ஆனபோதும், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகம் பூராகவும் 1,000,202 பேர் உயிரிழந்து உள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அதிகமான உயிரிழப்புகள் அமெரிக்காவிலேயே பதிவாகி உள்ளன.அங்கு இதுவரையில் 209,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 141,441 பேரும் , இந்தியாவில் 94,971 பேரும் உயிரிழந்துள்ளனர்.