(File Photo: António Guterres)
ஐநா அமைதிப் படையினருக்கு இரண்டு இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியமைக்காக ஜநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா அமைதிப்படைக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு கடினமான சூழ்நிலையில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா மொத்தம் 2 இலட்சம் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் உலக மக்களின் நலன் காக்க இந்தியா முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது, அதற்காக இந்தியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளதாக, ஜநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.