January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘130 நாடுகளுக்கு இன்னமும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை’

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 130 நாடுகளிற்கு இதுவரை தடுப்பூசி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், இது பெருமளவில் நியாயமற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுகையிலேயே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

130 உலக நாடுகளிற்கு இன்னமும் சிறியளவு கொரோனா தடுப்பூசி கூட கிடைக்கவில்லை.இந்த முக்கியமான தருணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியில் காணப்படும் சமநிலை என்பதே உலகளாவிய சமூகத்தின் முன்னால் உள்ள மிகப்பெரிய தார்மீக சோதனை.

உலகின் அனைத்து நாடும் கூடிய விரைவில் தடுப்பூசியை பயன்படுத்தும் நிலை ஏற்படுவதை உருவாக்குவதற்காக அவச ர சர்வதேச தடுப்பு மருந்து திட்டமொன்றை உருவாக்குமாறும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.