July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெக்சாஸ்: உறைபனி காலநிலையால் பாதிக்கப்பட்ட கடல் ஆமைகளை மீட்கும் பணியில் பொதுமக்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடரும் உறைபனியுடன் கூடிய காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான கடல் ஆமைகளை மீட்கும் பணியை பொது மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் தொடரும் உறைபனியுடன் கூடிய காலநிலையால், மனிதர்களைப் போன்றே உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான உறைபனி காரணமாக நீந்தவும், உணவுகளைத் தேடிக்கொள்ளவும் முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கடல் ஆமைகளை மீட்கும் தன்னார்வப் பணி புதன் கிழமையில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த மாநிலங்களில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பல நாட்களாக போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டு, மீன்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடையே உணவுத் தட்டுப்பாடு நிலவுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு உணவும், இருப்பிடமும் இல்லாத நிலையில் உள்ள பொது மக்களும் கடல் ஆமைகளை மீட்கும் தன்னார்வப் பணியில் ஈடுபட்டள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் ஆமைகளை மீட்டு, வெப்பநிலையுடன் கூடிய இடங்களில் வைப்பதற்கு மீட்புப் பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெரும் மாநாட்டு மண்டபங்களில் மீட்கப்பட்ட ஆமைகளை வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காலநிலை 15 செல்சியஸ் வெப்பநிலையை அடையும் போது ஆமைகளை கடலுக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.