July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய பயனாளர்கள் செய்திகளைப் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது

அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக்கில் செய்திகளைப் பார்ப்பதும் பகிர்வதும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் இவ்வாறு அவுஸ்திரேலியர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் பகிர்வதையும் முடக்கியுள்ளது.

வியாழக்கிழமை காலை முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தித் தளங்களின் செய்திகள் பேஸ்புக்கில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும், அரச, சுகாதாரத் துறையினரின் பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தத் தடை, அதன் ‘நம்பகத்தன்மைக்கு’ அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்ளவர்களும் அவுஸ்திரேலியா சார்ந்த செய்திகளைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் தெரியவருகின்றது.

செய்தி உள்ளடக்கங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டுமென்ற புதிய சட்டத்தை அவுஸ்திரேலியா கொண்டுவரவுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்ட முன்மொழிவுக்குப் பதிலாகவே, பேஸ்புக் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.