April 29, 2025 11:20:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் வாகனங்களை பயன்படுத்தி வீதிகளை மறிக்கும் போராட்டம்

மியன்மாரின் தலைநகர் யங்கூனில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வாகனங்களை பயன்படுத்தி வீதிகளை மறிக்கும் தந்திரோபாயத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை தொடர்ந்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்தி வீதிகளை மறித்துவருகின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் அலுவலகங்களிற்கு செல்வதை தடுப்பதற்கும் இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களை தடுப்பதற்கும் இந்த வீதியை மறிக்கும் தினத்தை முன்னெடுக்குமாறு சமூக ஊடகங்களில் வேண்டுகோள்கள் வெளியாகியிருந்தன.

யங்கூனில் பல வாகனங்கள் வீதிகளை மறித்தபடி காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பொதுப்பேருந்துகளின் சாரதிகளும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.