
நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள துப்பாக்கிதாரிகள் 27 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்.
பாடசாலை ஊழியர்கள் மூவரும் அவரது குடும்பத்தவர்கள் 12 பேரும்கடத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
600 மாணவர்கள் பாடசாலை விடுதியில் உறங்கிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவ சீருடை அணிந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவாறு உள்ளே நுழைந்து மாணவர்களை காடுகளிற்குள் இழுத்துச்சென்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படையினர் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சில மாணவர்கள் தப்பிவந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.