January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கத் தயார்: ரஷ்யா

(FilePhoto/Facebook)

ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான தடைகளை விதித்தால் அதனுடனான உறவுகளை துண்டிக்கவேண்டியிருக்கும் என ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரொவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்தடை விதிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் அலெக்சே நவால்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் பொருளாதாரத்தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாங்கள் சர்வதேச விவகாரங்களில் இருந்து எங்களை தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனவும் ஆனால் இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை முறித்துக்கொள்ளும் நிலைக்கு ரஷ்யா சென்று கொண்டிருக்கின்றதா? என்ற கேள்விக்கு பதலளித்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்,

நாங்கள் உறவை முறித்துக்கொள்ளத் தயார் எனவும் அமைதி வேண்டுமெனில் போருக்குத் தயாராகுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.