இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்குண்டு உயிரிழக்கும் தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அச்சமடைய வைக்கின்றது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாவது அலையின் போது வெள்ளையினத்தவர்களை விட கறுப்பினத்தவர்கள் அதிகளவு உயிரிழப்புகளை சந்தித்தனர்.
தற்போது தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக பங்களாதேஷ்,பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மூன்று மடங்கு ஆபத்தினை எதிர்கொள்வது தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
தென்னாசிய மக்கள் மத்தியில் குறிப்பாக பங்களாதேஷ்,பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கொவிட் 19 காரணமாக ஏற்படும் மரண வீதம் அதிகமாக காணப்படுகின்றது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டாவது அலையின் போது கறுப்பினத்தவர்கள் அதிகளவு உயிரிழப்பு ஆபத்தை எதிர்கொள்ளவில்லை. ஆனால் வெள்ளையினத்தவர்களுடன் ஒப்பிடும்போது தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஐந்து மடங்கு ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள நிபுணர்கள், பாகிஸ்தான் ஆண்கள் உயிரிழக்கும் ஆபத்து 4,8 மடங்கினாலும் இந்திய பெண்கள் உயிரிழக்கும் ஆபத்து 1.6 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.