மியன்மாரில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புடன் தொடர்புபட்ட இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
மியன்மார் இராணுவ அதிகாரிகள் மீதான புதிய தடைகளின் விபரீதங்களை அவர்கள் இந்த வாரம் முதல் கண்டுகொள்வார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தடைகள் இராணுவத் தலைவர்களையும் அவர்களது குடும்பத்தினர் உட்பட தொடர்புடையவர்களையும் இலக்காகக் கொண்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மியன்மார் அரசாங்கத்தின் ஒரு பில்லியனுக்கும் அதிகமான டொலர்களை மியன்மார் இராணுவம் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக ஆரம்பித்துள்ளனர்.
மியன்மார் மீது வலுவான ஏற்றுமதித் தடைகள் விதிக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.