சவுதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் பயணிகள் விமானமொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புபட்ட ஹூதி கிளர்ச்சிக் குழுவே, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சவுதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
யெமன் எல்லையில் உள்ள ஹூதி கிளர்ச்சிக் குழு, சவுதி மீது தொடர்ந்தும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சவுதி கூட்டுப் படை அவற்றை இடைமறித்து வருகின்றது.
120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையொன்றே அபா விமான நிலையத்தைத் தாக்கியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிவில் விமானங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது யுத்தக் குற்றமாகும் என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.