மியன்மார் யங்கூன் நகரில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்தை உடைத்து, இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளனர்.
நேற்று இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்தை உடைத்து, சோதனைக்குட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகத்துக்கு இராணுவத்தினர் சோதம் விளைவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவம் பதவி விலகி, அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி, 5 ஆவது நாளாகவும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு கட்டமாகவே, ஆளும் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மியன்மாரில் நடைபெற்று வரும் இராணுவ அடக்கு முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.