January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வூஹான் ஆய்வுகூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்புகள் ‘மிகக் குறைவு’

வூஹான் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருப்பதற்கான ‘வாய்ப்புகள் மிகக் குறைவு’ என கொவிட் -19 இன் தோற்றம் குறித்து ஆராயும் சர்வதேச நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிப்பதற்காக வூஹானிற்கு சென்றுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரெக் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிக்க மேலதிக ஆய்வுகள் தேவை என அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு, 2019 டிசம்பரில் வூஹானில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு வைரஸ் பரவியிருந்தமைக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சுகாதார ஆணையத்தின் நிபுணரான லியாங் வன்னியன், கொவிட் -19 வூஹானில் கண்டறியப்படுவதற்கு முன்னர் ஏனை பிராந்தியங்களில் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு சீன விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து வூஹானில் மேற்கொண்ட ஆய்வு முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.