July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜேர்மனி, ஸ்வீடன், போலந்தின் தூதர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஜேர்மனி, சுவீடன், போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அலெக்சே நவல்னிக்கு ஆதரவாக இடம்பெற்ற சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் இந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர் என மொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களிற்கான தலைவர் ஜோசப் பொரெல் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து சில மணித்தியாலங்களில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது இராஜதந்திரி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார் என்பதை சுவீடன் மறுத்துள்ளது.