மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைவதை உலகம் உறுதி செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான அழுத்தங்களை மியன்மாரின் மீது கொடுப்பதற்காக சர்வதேச சமூகத்தின் அனைத்து முக்கிய செயற்பாட்டாளர்களையும் அணிதிரட்டுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளையும் மக்களின் விருப்பத்தையும் மாற்றியமைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர் நாட்டை ஆள்வதற்கான வழிமுறை இதுவல்ல என்பதை சதிப்புரட்சி தலைவர்கள் உணரச்செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மியன்மாரில் அரசமைப்பினை அடிப்படையாக கொண்டு ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் பாதுகாப்பு சபையில் ஐக்கியம் நிலவும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது குறித்து மியன்மாரின் இராணுவத்தினரிற்கு உணர்த்தமுடியும் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.